IPL Eliminator – 228 ஓட்டங்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்

பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார். அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, பேர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் ஹர்திக் சில சிக்சர்கள் விளாச, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)