செய்தி விளையாட்டு

IPL Eliminator – தொடரில் இருந்து வெளியேறிய குஜராத்

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். குசால் மெண்டிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர்.அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!