செய்தி தமிழ்நாடு

மாஸ்டர் கிளப் சார்பில் அயன் லேடி கோப்பை போட்டி நடைபெற்றது

சென்னை ரெட்டிஹில்ஸ் ஸ்டாக் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி நடைபெற்றது.

மாஸ்டர் கிரிக்கெட் கிளப் நிறுவனர் ஷம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள தென்காசி,நெல்லை,கோவை,திருப்பூர், விழுப்புரம்,வேலூர்,ஈரோடு,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 மகளிர் கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

சென்ற மாதம் 17ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டி இன்று 02/05/2023 இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் STGMIS கிரிக்கெட் அகாடமி மற்றும் ஸ்மயிலிக் பியல்ஸ் கிரிக்கெட் அணி இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர்.

இதில் STGMIS கிரிக்கெட் அகாடமி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மகளிர் கிரிகெட் அணி தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் திருமதி.

பொற்சிலை மற்றும் புஷ்பா அவர்களும் தி ஸ்போர்ட்ஸ் ஸ்டோரி நிறுவனர் தயாளன் மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அயன் லேடி கோப்பை மற்றும் பதக்கங்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் சிறந்த பந்துவீச்சாளர் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஆர்வலர்கள்,கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி