ஐரோப்பா செய்தி

நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) பெலாரஸிற்கு வருமாறு அழைப்பு!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) தனது நாட்டிற்கு  வருமாறு பெலாரஸ் (Belarus) ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரான லுகாஷென்கோ (Alexander Lukashenko), பெலாரஸுக்கும் வெனிசுலாவுக்கும் நீண்டகால உறவுகள் இருப்பதாகவும், மதுரோ விரும்பினால் மின்ஸ்க்கு (Minsk) வரலாம் என்றும் கூறினார்.

அதற்கான எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை என்றும், ஆனால் ட்ரம்புடன் பேசுவதற்கு திறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், மதுரோவிற்கும் இடையே மோதல் இடம்பெற்று வரும் நிழலையில்  பெலாரஸ் ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுப்பது சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெலாரஸில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கு பிரதியீடாக ட்ரம்ப் நிர்வாகம் பெலாரஸின் பொட்டாஷ் (potash) தொழில் மீதான தடைகளை நீக்கியிருந்தது.

இந்நிலையில் மேற்படி பெலாரஸ்ய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!