இலங்கையை விட்டு வெளியேறும் முதலீட்டாளர்கள் : நாடாளுமன்றத்தில் கடுமையான தொனியில் பேசிய சஜித்!

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர்கள் கௌதம் அதானி இலங்கையின் காற்றாலை மின்சாரத் திட்டத்திலிருந்து விலகியதை அடுத்து, இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (14.02) உரையாற்றிய அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இது ஒரு கடுமையான சூழ்நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லாம் போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடக்க வேண்டும் என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் மின் தடை தொடர்பிலும் அவர் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
(Visited 2 times, 1 visits today)