ஹரக் கட்டா ஊடகங்களுக்கு அளித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன, அல்லது “ஹரக் கட்டா” தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வழக்கு ஒன்றிற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், நீதிமன்ற வளாகத்திலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரைப் பற்றி சந்தேக நபர் ஊடகங்களுக்கு சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை மேற்கொள்வதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.