மனிதர்களின் சிந்தனைகளை அறிந்து அதைச் சொல்லக்கூடியக் கருவி கண்டுபிடிப்பு
மனிதர்களின் சிந்தனைகளை அறிந்து அதைச் சொல்லக்கூடியக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வாளர்களால் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி fMRI படங்கள் மூலம் மக்கள் நினைப்பதைத் தோராயமாகச் சொல்லிக் காட்டிவிடும் என்று Nature Neuroscience இதழ் தெரிவித்துள்ளது.
டெக்சஸ் (Texas) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்தக் கருவி, பேச்சுத்திறனை இழந்தவர்கள், பக்கவாத நோயாளிகளுக்கு ஒருநாள் உதவும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
ஆனால் நிபுணர்களுக்கு இன்னும் கருவியைப் பற்றிய சந்தேகம் நிலவுகிறது என கூறப்படுகின்றது. கண்டுபிடிப்பை வைத்து மக்களின் எண்ணங்களை ரகசியமாக அறியமுடியாது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
அந்தக் கருவியால் ஆய்வில் பங்கேற்றவர்கள் எண்ணிய சில வார்த்தைகளைக் கூற முடிந்தாலும் அது இன்னும் நிறைய தவறிழைப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார்.
பேச்சுத்திறன் இழந்த நோயாளிகளுக்கு உதவும் கருவி, அவர்களின் எண்ணங்களைத் தவறான வாக்கியங்களில் பிரதிபலிக்காமல் இருப்பது முக்கியம் என்று அவர் கூறியுள்ளதர்.