பொது போக்குவரத்து சேவைகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம்! பந்துல குணவர்தன

பொது போக்குவரத்து சேவைகளில் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பேருந்து சங்கங்கள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண மட்டத்திலும் இது தொடர்பில் விரைவில் கருத்துக்கள் பெறப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)