ஐரோப்பிய ஒன்றிய எல்லை பகுதிகளில் உள்நுழைய புதிய விதிமுறைகள் அறிமுகம்!
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பகுதிகளில் தானியங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நுழைவதற்கான வேலைபாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டது.
Entry Exit System (EES)ன் கீழ், பிரிட்ஸ் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டவர்கள், அவர்கள் முதல் முறையாக எல்லையைத் தாண்டும்போது பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இதனால், பெரும் தாமதம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஐரோப்பிய விமான நிலையங்களில் தரையிறங்கும்போது பயோமெட்ரிக் தகவலை வழங்குவார்கள்.
இருப்பினும் Dover’s ferry port, Folkestone மற்றும் London St Pancras ஆகிய இடங்களில், இரட்டை எல்லைக் கட்டுப்பாடுகளின் ஏற்பாட்டில் பிரெஞ்சு எல்லை அதிகாரிகள் தற்போது மக்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறும்போது பாஸ்போர்ட்டுகளை சரிபார்த்து முத்திரையிடுகிறார்கள்.