WhatsAppஇல் லோ- லைட் வீடியோ அழைப்பு அம்சம் அறிமுகம்
வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை அறிமுகம் செய்கிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் வீடியோ கால் வசதியில் பேக்கிரவுண்ட், ஃபில்டர்ஸ் அம்சம் அறிமுகம் செய்தது.
இதன் தொடர்ச்சியாக இப்போது லோ- லைட் வீடியோ காலிங் அம்சம் அறிமுகம் செய்துள்ளது.
பயனர்களின் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்தும் வகையில் அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது.
அதாவது லோ- லைட் வீடியோ காலிங் என்பது வெளிச்சம் இல்லாத போதும் இந்த வசதியைப் பயன்படுத்தி நல்ல தரத்தில் வீடியோ கால் பேச அனுமதிப்பதாகும். அதாவது இந்த அம்சம் ஆக்டிவேட் செய்தால் லைட் வெளிச்சம் மேம்படுத்தி காண முடியும்.
லோ- லைட் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி?
1. முதலில் வாட்ஸ்அப் ஆப் செல்ல வேண்டும்.
2. உங்கள் நண்பர், உறவினருக்கு வீடியோ கால் செய்யுங்கள்.
3. வீடியோ அம்சத்தை full screenக்கு மாற்றவும்.
4. இப்போது மேலே வலப்புறத்தில் உள்ள பல்ப் போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
5. இதை செய்தால் லோ- லைட் மோட் ஆக்டிவேட் ஆகும்.