பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவும் வகையில் ChatGPT Health அறிமுகம்!
பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் வகையில் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கபட்ட ChatGPT Health ஐ OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பயனர்கள் Apple Health மற்றும் MyFitnessPal போன்ற பயன்பாடுகளிலிருந்து மருத்துவ பதிவுகள் மற்றும் ஆரோக்கியத் தரவைப் பாதுகாப்பாக இணைக்க அனுமதிக்கிறது.
இதனால் மிகவும் பொருத்தமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார நுண்ணறிவுகளைப் பெறலாம். இந்த தளம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்துகிறது.
260 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட OpenAI, ChatGPT Health, தொழில்முறை மருத்துவ பராமரிப்பை மாற்றுவதற்குப் பதிலாக ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி, சுவிட்சர்லாந்து மற்றும் UKக்கு வெளியே உள்ள சிலருக்கு மாத்திரம் தற்போது அணுகல் கிடைக்கும் எனவும் வரும் வாரங்களில் விரிவுப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





