கூகுள் செயலியில் புதிய வசதி அறிமுகம்
கூகுள் ஆப் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது.
புதிதாக ‘ஷேர்’ பட்டன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது ‘சர்ச் ரிசல்ட்’-களை (search results) ஓபன் செய்யாமல் அப்படியே மற்றவர்களுக்கு லிங்க் ஷேர் செய்ய முடியும்.
முன்னதாக கூகுளின் ஒரு தகவலைத் தேடி search results வந்த பின் அந்த பேஜின் லிங்க்கை கிளிக் செய்து பின்னர் அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும். தற்போது புதிய ‘ஷேர்’ அம்சம் மூலம் பேஜின் லிங்க்கை ஓப்ன் செய்யாமல் அந்த பக்கத்தை அப்படியே ஷேர் செய்ய முடியும்.
Search results அருகில் 3 புள்ளி பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ‘About this result’ செக்ஷன் ஓபன் செய்யப்படும்.
இதில் அந்த பக்கத்தின் விவரங்கள் கொடுக்கப்படும். அதன் கீழே ‘ஷேர்’ பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து மற்றவர்களுக்கு பகிரலாம்.
எனினும் இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட சர்ச் ரிசல்ட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கூகுள் பிளே ஆப்-களுக்கு செல்லக் கூடிய பக்கங்களுக்கு இந்த அம்சம் பயன்படுத்தவில்லை.