பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்று பேஸ்புக் மெசஞ்சரிலும் (Facebook Messenger) எடிட் ஆப்ஷன் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக்கில் இதை கொண்டு வந்துள்ளது. எழுத்துப் பிழை, வார்த்தைப் பிழையாக மெசேஜ் அனுப்பி விட்டால் அதை முழுவதுமாக டெலிட் செய்ய வேண்டாம், அதை எடிட் ஆப்ஷன் மூலம் எளிதாக திருத்தலாம்.
மெட்டாவின் மற்ற ஆப்களைப் போன்று இதிலும், மெசேஜ் அனுப்பி 15 நிமிடத்திற்குள் எடிட் செய்ய வேண்டும். அதுவரை மட்டுமே இந்த ஆப்ஷன் எனெபிள் செய்யப்படும். இந்த ஆப்ஷன் ஐபோன், ஆண்ட்ராய்டு இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த உங்கள் பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.
மெசஞ்சரில் எடிட் ஆப்ஷன் எப்படி பயன்படுத்துவது?
முதலில் மெசஞ்சரில் ஷேட் பக்கத்திற்கு செல்லவும். குறிப்பிட்ட ஷேட் பக்கத்திற்கு சென்று எந்த மெசேஜை எடிட் செய்ய வேண்டுமே அதை Long press செய்யவும். அடுத்து edit > select the edit option >கொடுக்கவும். இப்போது அந்த மெசேஜை எடிட் செய்யலாம். ஒரு மெசேஜ் அதிகபட்சமாக 5 முறை எடிட் செய்து கொள்ளலாம். மெசேஜ் எடிட் செய்த பின் அதன் கீழ் edited என்று ஹைலைட் செய்யப்படும்.