ஆப்கானிஸ்தானில் துண்டிக்கப்பட்ட இணையச் சேவை
ஆப்கானிஸ்தானில் இணையம், தொலைபேசிச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தலிபான் நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இணையத்தில் ஆபாசப் படங்கள் குறித்து அது ஏற்கனவே அக்கறை எழுப்பியிருந்தது. அண்மை வாரங்களில் ஆப்கானிஸ்தானின் சில மாநிலங்களில் கண்ணாடியிழை விரிவலைச் சேவை துண்டிக்கப்பட்டது.
தற்போது அங்கு இணையத் தொடர்பு ஒரு விழுக்காட்டில் இருப்பதாக அனைத்துலக இணையக் கண்காணிப்பு அமைப்பு NetBlocks கூறியது.
நேற்று இணையத் தொடர்பு கட்டங்கட்டமாகத் துண்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசிகளுக்கான 3G, 4G இணையச் சேவை ஒரு வாரத்தில் முடக்கப்படும் என்று அதிகாரிகள் சொன்னதாக உள்ளூர் ஊடகமான Tolo News எச்சரித்தது.
2G சேவை மட்டுமே வழங்கப்படும் என்று அது தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பெண்கள் வேலை செய்யவும் பாடசாலைக்கு படிக்கச் செல்லவும் அது தடை விதித்திருக்கிறது.





