ஆசியா

ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க ஆப்கானிஸ்தானில் இணையத்தை தடை

ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக இத்​தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாகாண அரசு தெரி​வித்​தது.

இந்​நிலை​யில் தலி​பான் தலை​வரின் உத்​தர​வின் பேரில் பாக்​லான், பதக் ஷான், குண்​டுஸ், நங்​கர்​ஹர், தகார் ஆகிய மாகாணங்​களி​லும் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு நேற்று முன்​தினம் தடை விதிக்​கப்​பட்​டது. ஆப்​கானிஸ்​தானில் ஆட்சி அதி​காரத்தை தலி​பான்​கள் கடந்த 2021 ஆகஸ்டில் கைப்​பற்​றிய பிறகு இது​போன்ற தடை விதிக்​கப்​படு​வது இதுவே முதல் முறை. இதனால் அரசு அலு​வல​கங்​கள், தனி​யார் துறை, பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் வீடு​களில் வைஃபை இணைய இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டு உள்​ளது. எனினும் மொபைல் இணைய சேவை தொடர்ந்து இயங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் ஒழுக்​கக்​கே​டான செயல்​களை தடுப்​ப​தற்​காக இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு மாற்று ஏற்​பாடு செய்​யப்​படும் என்​றும் மாகாண அரசுகள் கூறி​யுள்​ளன. இந்த தடையை ஆப்​கானிஸ்​தான் ஊடக ஆதரவு அமைப்பு கண்​டித்​துள்​ளது.

“தலி​பான் தலை​வரின் உத்​தர​வின் பேரில் மேற்​கொள்​ளப்​பட்ட இந்த நடவடிக்​கை, லட்​சக்​கணக்​கான மக்​களின் இலவச தகவல் மற்​றும் அத்​தி​யா வசிய சேவை​கள் பெறு​வதை தடுப்​பது மட்​டுமன்​றி, கருத்து சுதந்​திரம் மற்​றும் ஊடகப் பணிக்​கும் பெரும் அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்று அந்த அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

ஆப்​கானிஸ்​தானில் 1,800 கி.மீட்​டருக்கு மேல் ஃபைபர் ஆப்​டிக் நெட்​வொர்க் இருப்​ப​தாக​வும் மேலும் 488 கி.மீட்​டருக்கு ஒப்​புதல் அளிக்கப்பட்டுள்ளதாக​வும் கடந்த ஆண்டு தகவல் தொடர்பு அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர்​ கூறியிருந்தார்​.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்