இணையதள ஊடுருவல் விவகாரம் ; ரஷ்யாவுக்கான ஜெர்மன் தூதர் திரும்ப அழைப்பு
ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸின் கட்சி வைலதளங்களில் இணையம் மூலம் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்யாவுக்கான தங்கள் நாட்டு தூதரை ஜெர்மனி திரும்ப அழைத்துள்ளது.
ஜெர்மனியை ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் வலைதளத்தில் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அந்த நாடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில் ஜெர்மனி வெளியிறவுத் துறை அலுவலக அமைச்சகம் திங்கட்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாஸ்கோவில் உள்ள தங்கள்து தூதர் அலெக்ஸாண்டர் லாம்ஸ்டாஃபை திரும் அழைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)