காஸாவில் இனப்படுகொலை சாத்தியம் குறித்து சர்வதேச ஆய்வு நடத்த வேண்டும்: போப் பிரான்சிஸ்
காசாவில் இஸ்ரேலின் இராணுவப் பிரச்சாரம் பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலையா என்பதை உலக சமூகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் பரிந்துரைத்துள்ளார்.
புதிய புத்தகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பகுதிகளில், சில சர்வதேச வல்லுநர்கள் “காசாவில் என்ன நடக்கிறது என்பது ஒரு இனப்படுகொலையின் பண்புகளைக் கொண்டுள்ளது” என்று போப் கூறினார்.
“சர்வதேச சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளால் வகுக்கப்பட்ட தொழில்நுட்ப வரையறைக்கு (இனப்படுகொலையின்) இது பொருந்துமா என்பதை மதிப்பிடுவதற்கு நாம் கவனமாக ஆராய வேண்டும்,” என்று இத்தாலிய நாளிதழான லா ஸ்டாம்பாவால் வெளியிடப்பட்ட பகுதிகளில் போப் கூறியுள்ளார்.
இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இஸ்ரேல் மறுத்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)