இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை
“டிட்வா(Ditwa) சூறாவளியால் ஏற்பட்ட பரவலான அழிவைத் தொடர்ந்து இந்தப் பேரழிவால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் இவான் பாபகேர்ஜியோ(Evan Papageorgiou) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் US$200 மில்லியன் நிதி உதவியைக் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
“இந்த சவாலான காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது. மேலும் எதிர்காலத்திற்கான மீட்சி, மறுகட்டமைப்பு ஊக்குவிப்பதற்கான அவசர முயற்சிகளை மேற்கொள்ளும்போது நாட்டை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.





