உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பு சர்வதேச கொடையாளர் மாநாடு!
சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றதென அறியமுடிகின்றது.
பேரிடர் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் மீண்டெழுதல் உள்ளிட்ட விடயங்களுக்காகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது.
பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், அது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடவுள்ளது.
இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாடு நடத்தப்படும் என தெரியவருகின்றது.
சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





