ரணிலுக்கு தலையிடி: லண்டனிலும் களமிறங்கியது சிஐடி குழு!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் Wolverhampton பல்கலைக்கழகத்தால் அனுப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
இத பற்றி விசாரணை நடத்துவதற்கு ஐவரடங்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரிட்டன் சென்றுள்ளது எனவும், ஐந்து நாள் பயணமாக இக்குழு இவ்வார தொடக்கத்தில் பிரித்தானியா சென்றுள்ளது எனவும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் பெறப்படாமல் அல்லது சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்தாமலேயே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அதிகாரிகளின்இப்பணம் இடம்பெற்றுள்ளது எனவும் மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமையிலான அந்தக் குழுவில், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவரும், தலைமை ஆய்வாளர் ஒருவரும், இரண்டு இளநிலை அதிகாரிகளும், இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பயணம் குறித்து சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா உள்ளிட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் மட்டங்களில் உள்ளவர்களுக்கு, தெரியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்குத் தெரியாமல், இந்தக் குழுவை சுயாதீனமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர், ந பிரித்தானியாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர், சரோஜா சிறிசேனவிடம் நாளை வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். இவர் 2023 செப்டம்பரில் இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவராக பதவி வகித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக ரணில் விக்கிரமசிங்க 2023 இல் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது, 16.6 மில்லியன் ரூபா பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயணத்துக்காக எவ்வாறு அரச நிதியை பயன்படுத்த முடியும் என விமர்சனம் எழுந்தது.
இது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டபின்னர், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் பிணைகிடைத்ததால் அவர் வீடு திரும்பினார்.
அதேவேளை, ரணிலின் லண்டன் பயணம் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் இடம்பெற்ற அதிகாரபூர்வ பயணம் என, ரணில் விக்ரமசிங்க தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே அழைப்பு கடிதத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆராயப்படுகின்றது.





