இலங்கையில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கையில் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணய கொள்கையின் பரிமாற்றம் இன்னும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப, கொள்கை வட்டி விகிதங்கள் மேலும் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)