தீவிரமடையும் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: உக்ரைன் படைவீரர்களின் தலை துண்டிப்பு
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ரஷ்யப் படைகளால் தனது படைவீரர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது தொடர்பில் உக்ரைன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2022 இல் தொடங்கப்பட்ட உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பின் போது தனது படைகள் போர்க்குற்றங்களைச் செய்வதை பலமுறை மறுத்த ரஷ்யா, குற்றச்சாட்டு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
“உக்ரேனிய பாதுகாவலரின் தலை துண்டிக்கப்பட்ட உண்மை டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பதிவு செய்யப்பட்டது” என்று வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரி கோஸ்டின் X சமூக ஊடக தளத்தில் எழுதியுள்ளார்.





