கடுமையாகும் வெயில்: சோர்வு, மயக்கம் ஏற்படாமல் – மக்களுக்கு எச்சரிக்கை
வெப்ப நிலை அதிகரிக்கும்போது, நமது உடல் வரட்சியடைந்து, நீரிழப்பு ஏற்படும். இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் நாம் தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதுதான். இந்நிலையில் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால், நமக்கு நீரழப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம்.
வெப்ப நிலை அதிகரிக்கும்போது, அதிக வியர்வை வெளியாகும். நீண்ட நேரம் சூரிய கதிர்கள் பட்டால், உடல் பயிற்சி நீண்ட நேரம் செய்தால் நமக்கு நீரழப்பு ஏற்படலாம்.
இந்நிலையில் நீரழப்பின் அறிகுறியானது சோர்வு, மயக்கம், வரண்ட வாய், சிறுநீர் கழிக்கும்போது குறைந்த அளவில் நீர் வெளியாகும்.
இந்நிலையில் நீரழப்பு ஏற்படாமல் தடுக்க, தண்ணீரில் சிறிய அளவு உப்பு சேர்த்து குடிக்கலாம் என்று கூறப்படுகிறது. உப்பில் சோடியம் க்ளோரைடு உள்ளது.
இவை நமது உடலில் உள்ள திரவத்தின் அளவை சீராக்க உதவும். நமக்கு வியர்வை வெளியாகும் போது, தண்ணீருடன், எலட்ரோலைட் ஆனா சோடியம் சேர்ந்து வெளியாகும். இந்நிலையில் நாம் உப்பை சேர்ப்பதால், நமது உடல் இழந்த தண்ணீரை மீண்டும் பெற உதவும்.
இந்நிலையில் சிறுநீரகம் தொடர்பாக பிரச்சனை இருப்பவர்கள் உப்பை எடுத்துகொள்ள கூடாது. மேலும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் அனைவருக்கும் இது சரியான ஒன்று என்று கூற முடியாது. இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாதவர்கள் ஒரு சிட்டிகை உப்பு தண்ணீரில் சேர்த்துகொள்ளலாம்.