காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் தீவிர மோதல்: 48 மணி நேரத்தில் 350க்கும் மேற்பட்டவர்கள் பலி
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையால் நாசர் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளால் நிரம்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெருக்களில் சிதறிக் கிடக்கும் டஜன் கணக்கான உடல்களை மருத்துவக் குழுக்களால் அடைய முடியவில்லை, உள்ளூர்வாசிகள் இறந்தவர்களை கான் யூனிஸ் கல்லறைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் நகரின் நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் அடக்கம் செய்ய வேண்டியிருந்தது எனத் தெரிவித்துள்ளது.





