உளவுத்துறை எச்சரிக்கை – ஞானசார தேரர் பாதுகாப்பு கோரிக்கை!
தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதாள குழுக்களிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகளை தமக்கு வழங்குமாறு தேரர் கோரியுள்ளார் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினர்கள் தனக்குள்ள அச்சுறுத்தல் பற்றி விகாரைக்கு வந்து தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இணக்கத்துக்கு வந்துள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)





