இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளியான தகவல்!

இலங்கையில் பாடசாலை நேரங்களில் குழந்தைகள் கை, கால்களை மறைக்கும் வகையில் நீண்ட ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுளம்புக்கடியை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல் மாகாண உப குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் கல்வி அமைச்சும் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் 44,500 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)