ஜெர்மனியில் பெற்றோர்களுக்கு வெளியான தகவல் – கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை
ஜெர்மனியில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி அரசாங்கமானது குழந்தைகளுக்கு வழங்குகின்ற கொடுப்பனவாக கிண்டர் கெல்ட் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து ஒரு குழந்தைக்கு 219 யூரோவில் இருந்து 250 யூரோவாக அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனியின் நிதி அமைச்சரான கிறிஸ்டியான் லின் அவர்கள் கூடுதலான வருமானம் உள்ள பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்காக மாதாந்தம் 223 யுரோக்களை வரியில் இருந்து குறைப்பதற்கான ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
இதன் காரணத்தினால் சமூதாயத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஆளும் கூட்டு கட்சியுடைய பிரதான கட்சியான SPD கட்சியுடைய தலைவரான லாஸ் க்ளின் பைன் அவர்கள் மற்றும் கிறிஸ்டியான் லின் அவர்களும் கிண்ட கில்ட் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியத்தை 250 இல் இருந்து மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்கள்.