இலங்கை

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கமைய இந்த (01.10)  மாதத்திற்கான எரிவாயு திருத்தம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது  என்று நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவிற்கும்,  5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை   1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை   694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

அதேபோல் லாப்ஸ் எரிவாயுவின் விலையிலும்   எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்