இலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
நீர் கட்டண சூத்திரத்தில் உள்ள விடயங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகிறோம்.
(Visited 14 times, 1 visits today)