UKவிற்குள் சுற்றுலா விசாவில் நுழைபவர்களுக்கு மின்னணு பயண அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்!
சுற்றலா விசாவில் இங்கிலாந்து வரும் பயணிகளுக்கு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) நவம்பவர் மாதம் 27 ஆம் திகதி முதல் வழங்கும் எனக் கூறப்படுகிறது.
ஐரோப்பியர்கள் அல்லாத பயணிகள் புதிய எல்லைப் பாதுகாப்பு விதிகளின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் நுழைவதற்கு ETA க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ETA அமைப்பு இங்கிலாந்தின் எல்லை மற்றும் குடியேற்ற செயல்முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
TravelBiz இன் சமீபத்திய அறிக்கையின்படி, பாதுகாப்பை மேம்படுத்தவும், மில்லியன் கணக்கான பயணிகளின் நுழைவை எளிதாக்கவும் அரசாங்கம் இந்த மாற்றத்தைச் செய்கிறது.
எனவே நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி, பெரும்பாலான பார்வையாளர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும்.
இங்கிலாந்தில் நுழைவதை பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதே இதன் குறிகோளாகும்.