ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிகமான நிறுனங்கள் எதிர்பார்த்துள்ளன.
தொழிலாளர் பற்றாக்குறை சாதனை உயர்வை எட்டியுள்ள நிலையில் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், விசா கட்டுப்பாடுகள் மற்றும் நீண்ட விண்ணப்ப செயலாக்க காலங்கள் காரணமாக அவர்களை பணியமர்த்துவதை சிக்கலாகியுள்ளதுடன் புதியவர்களை ஈர்க்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் start-ups அமைப்பு இந்த செயல்முறைகளை எளிமையாக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
விசாக்களை வழங்கல் என வரும்போது, சிறப்பான டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும், வேகமாகவும், குறைவான சிக்கலானதாகவும் இருக்க வேண்டும் என்று சங்கப் பிரதிநிதியான மக்தலேனா ஓஹெல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 1859 start-ups நிறுவனங்களில், வெளிநாட்டிலிருந்து பணியமர்த்துவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளில் வெறும் 17 சதவீத நிறுவனங்கள் மாத்திரமே திருப்தி அடைந்துள்ளன.
அதன் மூன்றாண்டு காலத்தில், SPD-FDP-பசுமை கூட்டணி அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல புதிய கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது.
புதிய கொள்கைகள் ஜெர்மனியின் தொழிலாளர் பற்றாக்குறையின் அளவைக் கணக்கிடுவதற்கும், வரவிருக்கும் ஆண்டுகளில் மோசமான பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.