சிங்கப்பூர் ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரில் ஊழியர்களில் பாதிப் பேர் மட்டுமே தங்களது வேலையை நினைத்துப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (NTUC) நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 400 குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்கள் தொடர்பிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
25 சதவீதம் பேர்வேலையின் காரணமாக அவமதிக்கப்படுவதாகக் கூறினர். அது குறித்து ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“இந்த ஆய்வின் முடிவில் ஆச்சரியம் இல்லை. இது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். துப்புரவாளர்கள், விநியோக ஓட்டுநர்கள், உணவு-பானத் துறையில் வேலை செய்பவர்கள் உட்பட அனைவரும் மதிக்கப்பட வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் Progressive Wage Model எனும் படிப்படியாக உயரும் சம்பளமுறை திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் ஈட்டும் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளம் மேலும் உயர்த்தப்படும்.
சம்பளத்தை உயர்த்தினாலும் ஒருவரது கல்விப் பின்னணியை மட்டும் கருத்தில்கொள்ளாமல் அவரது திறனையும் முயற்சியையும் மதிப்பது முக்கியம்” என ம்” என ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.