இலங்கை மதுவரித் திணைக்களத்தின் வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 19 பில்லியன் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத இறுதிக்குள் 91.2 பில்லியன் ரூபாயை வரி வருவாயாகப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் அந்த இலக்கில் இதுவரை 98 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





