உலகிலேயே அதிக வேலை நேரத்தைக் கொண்ட நாடு தொடர்பில் வெளியான தகவல்
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பணியாளர் சமூகம் ஆண்டுதோறும் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பது குறித்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை OECD நடத்தியுள்ளது. தரவரிசையின்படி, கொலம்பியா உலகிலேயே அதிக வேலை நேரத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.
மேலும் ஒரு கொலம்பிய தொழிலாளி ஆண்டுக்கு சராசரியாக 2,405 மணிநேரம் வேலை செய்கிறார்.
இரண்டாவது இடத்துக்கு மெக்சிகோ தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மெக்சிகோ தொழிலாளி ஆண்டுக்கு சராசரியாக 2,226 மணிநேரம் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோஸ்டாரிகா பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் போது, கோஸ்டாரிகாவில் ஒரு தொழிலாளி ஆண்டுக்கு 2,149 மணிநேரம் வேலை செய்கிறார் என்று அது மேலும் கூறுகிறது.
அதன்படி, இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியா 19வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், ஆஸ்திரேலிய ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக 1,707 மணி நேரம் பணியாற்றுவதாக தரவு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.