இலங்கையில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சின் செயலாளர் என்.எம்.நயமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் விலைகளை உயர்த்தி முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாக செயலாளர் தெரிவித்தார்.
(Visited 27 times, 1 visits today)