பிரான்ஸில் ஆடைகள் தொடர்பில் மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட தகவல்

பிரான்ஸில் ஆடைகள், காலணிகளை வீசாமல் பழுதுபார்த்துத் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பிரான்சில் ஆண்டுதோறும் 700,000 டன் ஆடைகள் வீசப்படுகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு குப்பை நிரப்புமிடங்களில் குவிகின்றன.
காலணியின் குதிகால் பகுதியைப் பழுதுபார்க்க வாடிக்கையாளர்களுக்கு 7 யூரோ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைகளைச் சரிசெய்து தருவோர் 10இலிருந்து 25 யூரோ வரை பெறலாம் என கூறப்படுகின்றது.
இவ்வாண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை இந்தப் புதிய நடைமுறைக்குக் கைகொடுக்க 154 மில்லியன் யூரோ கொண்ட நிதி அமைக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)