ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழ்பவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனி நாட்டில் ஜொப் சென்டர் உதவிகளை வழங்க இருக்கின்றது.
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் தங்களது வாழ்கை செலவுகளை ஈடு செய்கின்றவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகவே காணப்படுகின்றது.
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழ்ந்து கொண்டு கரியர்பொன் என்று சொல்லப்படுகின்ற விடுமுறையை களிக்கின்ற வீடுகளில் வசிக்கின்ற ஓர் குடும்பத்தினருக்கு ஜொப் சென்டர் ஆனது அதற்குரிய வாடகை பணத்தை வழங்க வேண்டும் என்று லண்டன் சோஸிஸியால் கிரிப் பிரைப்போர் தனது உத்தரவை தெரிவித்து இருக்கின்றது.
அதாவது ஓர் குடும்பமானது சமூக உதவி பணத்தை பெறுவதற்கு முன்னர் இவ்வகையான விடுமுறையை களிக்கும் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் இந்நிலையில் இந்த வீட்டுக்குரிய வாடகை பணத்தை இவர்கள் சமூக உதவி பணத்தை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் சமூக உதவி பணத்தில் விண்ணப்பம் செய்து சமூக உதவி பணமானது வழங்கப்படாத பட்சத்தில் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதன் காரணத்தினால் இவர்கள் சமூக உதவி திணைக்களத்தில் இந்த விண்ணப்பத்தை செய்துள்ள போது அதனை சமூக உதவி திணைக்களம் மறுத்துள்ளது.
இந்த மறுப்புக்கு எதிராக இந்த விண்ணப்பதாரியானவர் மாநில சமூக நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து இருக்கின்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது தற்பொழுது ஜொப் சென்டர் ஆனது இந்த குறிப்பிட்ட குடும்பத்துக்கு விடுமுறை வீட்டில் இருக்கின்ற பொழுதும் அவர்களுக்கு வீட்டுக்குரிய வாடகை பணத்தை வழங்க வேண்டும் என்று தனது கட்டளையை தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.