ஜெர்மனியில் உதவிப் பணம் பெறும் மக்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் வழங்கப்படும் சமூக உதவிப் பணம் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வரவு செலவுத்திட்டத்தில் பாரிய துண்டுவிழும் தொகை ஏற்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கிறிஸ்டியான் லின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சமூக உதவி பெறுவோருக்கு, தற்போதைய சூழ்நிலையில் அதிகரிப்புக்களை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டில் அகதி கோரிக்கையை முன்வைப்போருக்கும் வழங்கப்படும் உதவிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் சமூக உதவி பணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்புக்களை குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோருவோருக்கு பலதரப்பட்ட வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அகதி ஒருவருக்கு மாதாந்தம் 460 யூரோ வழங்கப்படுகிறது.
முகாம்களில் வாழும் அகதிக்கு 413 யூரோவும் அகதி ஒருவர் ஜெர்மனிக்குள் நுழைந்தவுடன் உடனடியாக தங்க வைக்கின்ற முகாம்களில் வாழும் பொழுது 364 யூரோவும் வழங்குதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் இந்த கொடுப்பனவுகளில் 13 யூரோவை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.