ஸ்பெயினில் கைவிடப்பட்ட நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் வெளிவரும் தகவல்
ஸ்பெயினில் கைவிடப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களுடன் கைவிடப்பட்டதாக கருதப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ஸ்பெயின் பொலிஸார் கைப்பற்றினர்.
காலிசியன் கடற்கரை அருகே கப்பல் மிதப்பதாக மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் படகில் சென்று கடலில் இறங்கி ஆய்வு செய்தனர்.
பின்னர் கைவிடப்பட்ட நீர்மூழ்கி கப்பலை கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்துக் கொண்டு சென்று சுங்க அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
இதன் போதைப் பொருட்களுடன் இந்த கப்பல் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.





