ஜெர்மனியில் அதிகளவில் வாழும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் நாடு அற்றவர்களாக 30 ஆயிரம் பேர் வரை இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நாட்டிற்கு பலர் அகதிகளாக வருவது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் நாடற்ற மக்களாக 30 ஆயிரம் பேர் வரை இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
குறிப்பாக பலஸ்தீனம் மற்றும் பர்மாவின் ஒகிஸ்ஷா பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் இவ்வாறு நாடற்ற பிரஜைகளாக கணிக்கப்படுவதாக தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் மேலும் 97 ஆயிரம் பேர் ஜெர்மனியில் வாழுகின்ற வெளிநாட்டவர்களுடைய பிரஜா உரிமை பற்றி தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பிரஜா உரிமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதாவது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த நிலமையானது பாரிய அளவு உயர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனால் ஜெர்மனிய அரசாங்கமானது இந்த பிரஜா உரிமை கணக்கெடுப்பு தொடர்பில் கணக்கெடுப்பதற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளனர்.