ஜெர்மனியில் புதிய சட்டம் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனிய நாட்டில் வெப்ப மூட்டிகள் பாவனை மற்றும் கட்டணங்கள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி பாராளுமன்றத்தில் கூட்டு கட்சியனது வெப்ப மூட்டிகள் விடயத்தில் புதிய ஒரு சட்டத்தை இயற்றி இருக்கின்றது.
அதாவது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற வகையில் புதிய வெப்ப மூட்டிகள் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது புதிய சட்டமாகும்.
இந்நிலையில் புதிய வெப்ப மூட்டியில் 60 சதவீதமான சக்திகள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற சக்திகளில் இருந்து இயங்க வேண்டும் என்று புதிய சட்டம் கூறுகின்றது.
இதேவேளையில் இவ்வாறு புதிய வெப்ப மூட்டிகளை கட்டுவதாக இருந்தால் அவற்றுக்கான செலவு தொடர்பில் கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் சமூதாயத்தில் வசதி குறைந்தவர்களுக்கு இந்த வெப்ப மூட்டியின் 50 சதவீதமான பணத்தை அரசாங்கமானது பொறுப்பு ஏற்றுள்ளது.
குறிப்பாக சம உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் அல்லது வீடுகளுக்காக அரசாங்கம் கொடுக்கின்ற நிதியத்தை பெறுகின்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை பெறுகின்றவர்கள் போன்றவர்களுக்கு இவ்வாறு புதிய வெப்ப மூட்டியின் 50 சதவீதமான பணத்தை அரசாங்கம் பொறுப்பு ஏற்கும் என்றும் தெரிய வந்திருக்கின்றது.
இந்நிலையில் மற்றையவர்கள் இவ்வாறு புதிய வெப்ப மூட்டிகளை நிருவும் பொழுது அரசாங்கமானது 30 சதவீதத்தை பொறுப்பு ஏற்கும் என தெரிய வந்திருக்கின்றது.
மேலும் இவர்கள் குறைந்த வட்டி வீதத்தில் கடன் பெற கூடிய வகையில அரசாங்கம் புதிய வழிமுறை ஒன்றை கையாளப்போவதாகவும் தெரியவந்திருக்கின்றது.