ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவந்த தகவல்
ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது.
ஜெர்மன் அரசானது 49 யூரோ பயண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் பயண அட்டையானது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேவேளையில் பயண அட்டையை பல லட்சக்கணக்கானோர் இதுவரை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல புகையிரத நிலையங்கள் மற்றும் இந்த பயண அட்டையை விற்கின்ற முகவர் நிலையங்களுக்கு முன்னால் பலர் வரிசையில் காத்திருந்து இந்த பயண அட்டையை கொள்வனவு செய்ததாக தெரிய வந்திருக்கின்றது.
மேலும் இந்த பயண அட்டையை மாதாந்த அடிப்படையில் கொள்வனவு செய்ய வேண்டும்.
அதேவேளையில் பயண அட்டையை மாத முடிவில் ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிக்கொள்ள முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
இந்த பயண அட்டையை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் நபர் ஒருவருக்கு ஜெர்மன் நாட்டிலே வங்கி கணக்கு ஒன்று இருத்தல் வேண்டும்
மேலும் தனிநபர்கள் தங்களது கடவுசீட்டுகளை அல்லது அடையாளங்களை நிருபீக்க வேண்டும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
இந்த பயண அட்டையை இன்னொருவர் பாவணைக்கு உட்படுத்த முடியாது என்றும் எவர் ஒருவர் இந்த பயண அட்டையை கொள்வனவு செய்கின்றாரோ அவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது.