இலங்கையில் இல்லங்களை மீள ஒப்படைத்த முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 14 வீடுகளே இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சின் உயரதிகாரி குறிப்பிட்டார்.
(Visited 15 times, 1 visits today)