யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த இந்திய விமான சேவையான அலியன்ஸ் எயார் நிறுவனமே தனது சேவையை இந்த மாதம் முதல் இடைநிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக தற்போது யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவையை இன்டிகோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு சேவைகள் ஒரு சேவையாக மாத்திரமே இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், காலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாகை – இலங்கை , காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)