இலங்கை

இலங்கை : ஜுலை மாதத்திற்கான பணவீக்க நிலைமை!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூன் 2024 இல், இது 2.4% ஆக பதிவு செய்யப்பட்டது. ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் 7.5% ஆக பதிவான போக்குவரத்து துணைப் பிரிவில் பணவீக்கம் ஜூலை 2024 இல் 4.9% ஆகக் குறைந்துள்ளது.

சுகாதார துணைப் பிரிவில் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.7% இல் இருந்து 4.0% ஆக உயர்ந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்