பணவீக்கம் மேலும் உயரலாம் என்ற கணிப்பு
ஜனவரி மாதத்தில் பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மதிப்புக்கூட்டு வரி (வட்) அதிகரித்ததே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிசம்பரில் 4% ஆக இருந்த பணவீக்கம் வட் காரணமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால பணவீக்க இலக்கு 5% எனவும், மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், சராசரி பெறுமதி 4% – 6% வரை பேணப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
(Visited 6 times, 1 visits today)