இலங்கை செய்தி

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் வேகமாக பரவிவரும் தொற்று நோய்!

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் கண் தொடர்பான நோய் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் ( pink eye or sore eyes) தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தொற்றானது  வேகமாக பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும்  கார்னியல் அறுவை (Corneal Surgeon) சிகிச்சை நிபுணர் குசும் ரத்னாயக்க ( Kusum Ratnayaka) தெரிவித்துள்ளார்.

தற்போதைய தொற்றுகளில் பெரும்பாலானவை வைரஸ்களால் ஏற்படுகின்றன, அவை சில பருவங்களில் அதிகமாக பரவுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாக்டீரியாக்களும் இளஞ்சிவப்பு கண்ணை ஏற்படுத்தும்.  குழந்தைகள் உட்பட பலருக்கு சமீபத்திய வாரங்களில் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்து பரவுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!