உத்தரபிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே நசுங்கி உயிரிழந்த சிசு
உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) கஜ்ரௌலா(Gajraula) பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையே தற்செயலாக நசுங்கி ஒரு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
25 வயது சதாம் அப்பாஸி(Saddam Abbasi) மற்றும் அவரது மனைவி அஸ்மா(Asma) ஆகியோருக்கு சுஃபியான்(Sufyan) என்ற குழந்தை நவம்பர் 10ம் திகதி பிறந்தது.
குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, பெற்றோர் இரவில் தெரியாமல் உறங்கியதால் 26 நாள் குழந்தை அவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அடுத்த நாள் காலை குழந்தை பதிலளிக்காமல் இருந்ததால் அருகில் உள்ள கஜ்ரௌலா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்ததிலிருந்து பலவீனமாக இருந்ததாகவும், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பின்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





