INDvsWI Test – மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார்.
அந்தவகையில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களும், கில் 129 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இதனால் இந்தியாவை விட 270 ஓட்டங்கள் பின்தங்கி இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் (Follow On) முறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இன்றைய மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் பெற்றுள்ளது. கேம்பல் 87 ஓட்டங்களுடனும் ஷாய் ஹோப் 66 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.