INDvsSA – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 203 ஓட்டங்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 7 ரன்னில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி 66 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 21 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.